Farming
நஷ்டம் ஏற்படாதவாறு பயிர்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் - கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் அறிவுரை
SimpliCity News Team · 14 Sept 2023
கோவை: தேவைகளுக்கு ஏற்ப மற்றும் நஷ்டம் ஏற்படாதவாறு விவசாயிகள் பயிர்களை விளைவிக்க வேண்டும் என்று வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி வலியுறுத்தினார்.
கோவை தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் இந்திய வேளாண் சந்தைப்படுத்துதல் சங்கம் ஹைதராபாத் இணைந்து நடத்தும் 37-வது தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் மாநாடு இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் முழுநேர உறுப்பினர் பேராசிரியர் முனைவர் ரமேஷ் சந்த், மற்றும் விவசாய செலவுகள் மற்றும் விலைகள் ஆணைய தலைவர் முனைவர் விஜய் பால் சர்மா, தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நல செயலர் சமயமூர்த்தி ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் முக்கிய தீர்வுகளான வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நடவடிக்கைகள், வேளாண் விற்பனை சார்ந்த கடன் திட்டங்கள் போன்ற வரை முறைகளை விவசாயிகளுக்கு போன்ற விழிப்புணர்வு தீர்மானம் தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணைவேந்தர் கீதாலட்சுமி விவசாய மாநாட்டை மாநாட்டில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, உற்பத்தி செலவுகளை குறைப்பது குறித்தும் சந்தைப் படுத்துவதினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து அதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது என்று கூறினார்.
பொதுவாக விவசாயிகள் எந்த பொருட்கள் விலை உயர்கிறதோ அதே பொருளே அதிகளவில் விளைவித்து வருகின்றனர். சில மாதங்களுக்குப் பிறகு அந்த பொருள் விலை குறையும் போது விவசாயிகள் விளைவித்த பொருள் அதிகளவில் வருவதனால் விவசாயிகளுக்கு பெரும் அளவில் நஷ்டம் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.
தேவைகளுக்கு ஏற்ப மற்றும் நஷ்டம் ஏற்படாதவாறு விவசாயிகள் பயிர்களை விளைவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழ்நாடு விவசாய கல்லூரி சார்பாக விவசாயிகளுக்கு எவ்வாறு லாபம் ஈட்ட வேண்டும் என்றும் குறைந்த பயிரிடல் மூலமாக அதிக அளவில் லாபம் ஈட்டக் கூடிய வகையில் விழிப்புணர்வு எடுத்து ஏற்படுத்தி வருவதாக கூறினார்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர மழைப்பொழிவு இல்லாததால் விவசாயிகளுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது எனவும் அதனை ஈடு செய்யும் வகையில் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி கொண்டிருப்பதாக கூறினார்.
ஒவ்வொரு மாதத்திற்கும் தேவைக்கு ஏற்ப மழை பெய்யாமல் மொத்தமாக பெய்து விட்டதால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். தென்னை மரத்தில் இருக்கும் தேங்காய்களுக்கு ஏற்படும் நோய்களை கண்டறிந்து அதற்கு ஏற்ப ஊட்டச்சத்து வழங்கி தென்னை மரங்களை நோயிலிருந்து காப்பாற்றி வருவதாக அவர் கூறினார்.
Related stories
News
Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver
29 May 2026
Events
Webinar on Vanilla Cultivation - Potential Economic Benefits to Farmers !
31 Oct 2020
Events
Vision Doubling Farmer's Income: Opportunities and Challenges!
22 Jul 2020
News
மேட்டுப்பாளையத்தில் தொடரும் ஒற்றை காட்டுயானை அட்டகாசம்; ஒரு வாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை, தென்னை நாசம்
28 Jun 2020